விருதுநகரில் ராதிகா சரத்குமார், வடசென்னையில் பால் கனகராஜ் போட்டியிடுவதாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன். வி. பாலகணபதி, வட சென்னையில் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல திருவண்ணாமலையில் அஸ்வதாமன், நாமக்கல்லில் கே.பி. ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சியில் கே. வசந்தராஜன், கரூரில் வி.வி. செந்தில்நாதன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் எஸ்ஜிஎ ரமேஷ், தஞ்சையில் எம். முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் பி. ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதன்படி, தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமாரும், சிதம்பரம் (தனி) தொகுதியில் காத்தியாயினி போட்டியிடுகின்றனர்.
Read More : AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் மின் கட்டணத்தை குறைக்கலாமா..? அட ஆமாங்க..!! விவரம் இதோ..!!