காஜியாபாத்தின் பிரபலமான ராடிசன் ப்ளூ ஹோட்டலின் உரிமையாளர் டெல்லியின் காமன்வெல்த் கிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

டெல்லி காமன்வெல்த் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடல் காணப்படுவதாக, டெல்லியின் மண்டவலி காவல் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அக்கா பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர், இறந்தவர் காஜியாபாத்தில் உள்ள கௌசாம்பியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலின் உரிமையாளர் அமித் ஜெயின் என்று அடையாளம் கண்டனர். வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்ட வருகின்றனர்.