fbpx

ரஹானேவின் அதிரடி ஆட்டம்!… தோனி சொன்ன அந்த ஒத்த வார்த்தை!… மும்பையை வீழ்த்த இதுதான் காரணமாம்!…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில், போட்டிக்கு முன் ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து தல தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 12-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி 40 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் அசத்தியது அஜிங்க்யா ரஹானே தான். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரஹானேவிற்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஹானே, சிஎஸ்கேவிற்காக ஆட கிடைத்த முதல் வாய்ப்பிலேயே 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 16 பந்தில் அரைசதம் அடித்த ரெய்னா தான் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்தவர். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ரஹானே. சிஎஸ்கேவிற்காக ஆடிய முதல் போட்டியிலேயே சாதனை அரைசதம் அடித்தார் ரஹானே. தனது அபாரமான பேட்டிங்கால் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆடும் லெவனில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார்.

மற்ற அணிகளில் ஆடும்போது சரியாக ஆடாத வீரர்கள் கூட, தோனியின் கேப்டன்சியில் நன்றாக ஆடுவார்கள். ஒரு வீரரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வல்லவர் தோனி. அந்தவகையில், ரஹானேவின் பேட்டிங் குறித்து பேசிய தோனி, போட்டிக்கு முன் ரஹானேவிடம் ஒரு விஷயம் தான் சொன்னேன்.. எந்த அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸாக ஜாலியாக பேட்டிங் ஆடுங்கள் என்று மட்டும்தான் ரஹானேவிடம் சொன்னதாக தோனி கூறியுள்ளார்.

Kokila

Next Post

இன்ஸ்டாவில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்!... ரூ.8.6 லட்சம் பணத்தை இழந்த சோகம்!... எப்படி பாதுகாப்பாக இருப்பது?

Mon Apr 10 , 2023
இன்ஸ்டாகிராமில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ.8.6 லட்சத்திற்கும் அதிகமான பணம் மோசடி செய்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஒரு வேலைக்கான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்பு அந்த வேலைக்கான லிங்க்-ஐ கிளிக் செய்தபோது தேவையான விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அவரும் விவரங்களை கொடுத்துவிட்டு, ரூ.750 ஐ பதிவுக் கட்டணமாக டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு, கேட் பாஸ் கட்டணம், […]

You May Like