fbpx

எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி..? காங்கிரஸில் இருந்து குவியும் கோரிக்கை..!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. தொடர்ந்து இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த வகையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், ‘எனது தலைவர் ராகுல் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேட்டேன். அவர் மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் எம்.பி.க்களும் அப்படித்தான் நினைப்பார்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சி எப்படி முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி’ என்று பதிவிட்டிருந்தார். இதேபோல் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி..!! தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Congress MP There has been a demand in the Congress to appoint Rahul Gandhi as the Leader of the Opposition.

Chella

Next Post

'500 மனைவிகளுடன் வாழ்ந்த கொடூர பேரரசன்' இன்றும் இவர் DNA ஒன்றரை கோடி மக்கள் இரத்தத்தில் இருக்காம்!

Thu Jun 6 , 2024
The cruel emperor who lived with 500 wives, even today his DNA is in the blood of one and a half million people

You May Like