மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சரும் அமேதி எம்பியுமான ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வயநாட்டில் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பிஎஃப்ஐ-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொல்லப்படும் இந்துக்களின் எண்ணிக்கையை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளதாக என்று அவர் கூறினார்.
இந்துக்களைக் கொல்லத் திட்டமிடும் PFI-ன் உதவியை ஏன் எடுக்கிறார்கள் என்பதை அமேதி மக்களிடம் ராகுல் காந்தி சொல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அமேதியை உருவாக்கினார், அமேதி மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஆசீர்வதிப்பார்கள். இப்படி ஒரு அமைப்பின் உதவியுடன் வயநாடு தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பதை அமேதி மக்களிடம் ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்றார்.