fbpx

“ராகுல்காந்தி, நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி..” காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து..

ராகுல்காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ அமிதேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ அமிதேஷ் சுக்லா, ராகுல்காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமிதேஷ் சுக்லா, மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறினார். “ராகுல் காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி. அவருக்கும் மகாத்மா காந்திக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளர்..

இதுகுறித்து பேசிய அவர் “ நான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை (ஷ்யாமா சரண் சுக்லா, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்) மற்றும் எனது மாமா (மூத்த காங்கிரஸ் தலைவர் வித்யா சரண்) ஆகியோரிடமிருந்து மகாத்மா காந்தியைப் பற்றி நான் கேட்ட விஷயங்கள் வைத்து, மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

மகாத்மா காந்தியால் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க முடியும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதேபோல், 2004 மற்றும் 2008ல் ராகுல் காந்தி பிரதமராகி இருக்ககலாம் ஆனால் ராகுல்காந்தி வரவில்லை. மகாத்மா காந்தி போது பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு தண்டி யாத்திரை மேற்கொண்டார்.. அதே போல் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாடு முழுவதும் நடந்து சென்று மக்களுடன் உரையாடினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அகிம்சை என்ற ஆயுதத்தால் முடிவுக்குக் கொண்டு வந்த மகாத்மா காந்தியைப் போலவே, ராகுல் காந்தியும் அச்சமின்றி உண்மையைப் பேசுகிறார், அதானி விவகாரத்தில் புள்ளி விவரங்களுடன் உண்மையைப் பேசுகிறார்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

"நடத்தையில் சந்தேகம்......" கள்ளக் காதலியை கொன்று 2 குழந்தைகளை கொன்று எரித்துவிட்டு ஓடிய கொடூரம்!

Thu Apr 6 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்த கொடூர கொலைகாரனை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வைபவ் வாக்மாரே 30 வயதான இவர் புனேயில் தங்கியிருந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான அம்ரபல்லி […]

You May Like