2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தார்.
இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு:
கிரிமினல் அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.