fbpx

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொந்தமா வீடு கார் இல்ல!

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் வேட்புமனு மூலம் அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தியின் வேட்புமனுவில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, பங்குச் சந்தையில் சுமார் 4 கோடியே 30 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டு முதலீடாக 3 கோடியே 81 லட்சம் ரூபாயும், வங்கிக் கணக்கில் 26 லட்சத்து 25 ஆயிரமும் வைத்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். இது தவிர ரொக்கமாக 55 ஆயிரம் ரூபாய் கையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராகுல் காந்தியிடம் 9 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 11 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளும் உள்ளன. டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள விவசாய நிலம், குருகிராமில் உள்ள அலுவலகம் என அசையா சொத்துகள் இருப்பதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் ராகுலின் மொத்த சொத்து மதிப்பு 15 கோடியே 89 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சுமார் 20 கோடியாக அது அதிகரித்துள்ளது.

இவ்வளது சொத்து வைத்திருந்தாலும் கூட ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Next Post

ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி மாஸ் வெற்றி..!! சஷாங்க் சிங்கிற்கு குவியும் வாழ்த்து..!!

Fri Apr 5 , 2024
ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால், அவர்கள் எடுக்க நினைத்தது, 19 வயதான சஷாங்க் சிங். ஆனாலும், பஞ்சாப் அணி அவருக்கு வாய்ப்பளித்தது. 15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். […]

You May Like