fbpx

Rahul Gandhi | மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி..!! மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ததை திரும்பப் பெறுமாறு மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்திருந்தது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எம்பி பதவி திரும்ப ஒப்படைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதேபோன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தியை பேச வைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

அடடே என்ன ஒரு தங்கமான மனசு………! உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 24 லட்சம் நிதி உதவி வழங்கிய பேட்ச்மெட்ஸ்…….!

Mon Aug 7 , 2023
தமிழகத்தில் பல நபர்கள் ஆதரவற்ற நிலையிலும், யாசகம் பெறும் நிலையிலும் இருக்கிறார்கள். இது போன்ற பலரை நாம் நாள்தோறும் சந்திக்கின்றோம். ஆனால் இது போன்ற நபர்களுக்கு உதவி புரியும் மனது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடாது. ஆனால் அதையும் கடந்து, பல ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் நல காப்பகங்கள் என்று பல்வேறு நிறுவனங்களுக்கு தாராள மனதுடன், உதவி புரியும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி ஒரு […]

You May Like