ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை அவரின் சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது..
மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. எனினும் 2 ஆண்டு சிறைத்தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்கு முன் ராகுல் காந்தி இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்..
இந்நிலையில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று மேல்முறையீடு செய்தார்.. . இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக குஜராத் அரசு, மனுதாரரான பாஜக எம்.எல். புருனேஷ் மோடி ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது..
மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்றைய தினம் ராகுல்காந்தி ஆஜராக தேவையில்லை என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.. அந்த விசாரணைக்கு பிறகே, ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்யப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தான் தெரியவரும்..