fbpx

“நான் பார்த்து ரசித்த இளம் தலைவர் ராகுல்..!” – செல்லூர் ராஜூ பதிவால் பரபரப்பு!

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில்,  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2 நாட்களுக்கு முன் டெல்லியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உணவு அருந்திக் கொண்டே கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார். ராகுல் காந்தியின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய நிலையில் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபின் அதிமுகவின் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படும் நிலையில் செல்லூர் ராஜு பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்ட போது,  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எளிமையை பார்த்து இந்தப்பதிவை போட்டதாகவும், வேறு எதுவும் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விமானம் மோதி கொத்து கொத்தாக செத்து விழுந்த பிளமிங்கோ பறவைகள்! – தரையிறங்கும் போது நடந்த துயரம்!

Next Post

நீண்ட நேரம் ஏசியில் இருப்பவரா நீங்கள்..? அப்படினா இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வரும்..!! உஷார்..!!

Tue May 21 , 2024
AC | கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஆனால், நாட்டின் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஏசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஏசி என்பது அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏசியால் […]

You May Like