fbpx

சென்னையில் கனமழை……! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

தலைநகர் சென்னையில் நேற்று பெய்த மழையின் காரணமாக, மழை நீர் தேங்கி இருப்பதால் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய 7 ரயில்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முக்கிய 2 பாதைகளில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீர் தேங்கி இருப்பதால் ஆவடி திருத்தணி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் இடையிலான பாலம் எண் 14ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மைசூர் விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய திருப்பதி விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயில், ஆவடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மும்பை சிஸ்டி விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அதேபோல சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய சிமோகா சிறப்பு ரயில் திருவள்ளூரில் இருந்து கிளம்பும் அதேபோன்று சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய கே எஸ் ஆர் வால்பாக் விரைவு ரயில், ஆவடியில் இருந்து கிளம்பும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

Mon Jun 19 , 2023
இன்று தமிழகத்தின் பல துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதுகுறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு, நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் பிரதீப் சிங் வணிக வரித்துறை […]

You May Like