fbpx

#Rain..!! அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை..!! மாவட்டங்களின் லிஸ்ட் ரெடி..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rain..!! அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை..!! மாவட்டங்களின் லிஸ்ட் ரெடி..!!

அதேபோல், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rain..!! அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை..!! மாவட்டங்களின் லிஸ்ட் ரெடி..!!

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை… மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியதாக புகார்…

Mon Nov 14 , 2022
பெங்களூருவில் தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு பானசவாடியைச் சேர்ந்த மாணவி அம்ருதா அதே பகுதியில் அமைந்துள்ள மரியம் நிலையா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பெற்றோர்கள் இது பற்றி விசாரித்ததில் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின்போது […]

You May Like