fbpx

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த அதீத கனமழையால் சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முழுதாக திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நின்று 4 நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாத நிலை தொடர்கிறது.

புயல் ஓய்ந்த பின்னரும் சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், ராமநாதபுரம் என 15 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சூப்பர் நியூஸ்...! இவர்கள் அனைவருக்கும் 50 சதவீத கல்விக் கட்டண சலுகை...! மத்திய அரசு தகவல்...!

Fri Dec 8 , 2023
ஐ.எஸ்.பி.யின் முதுகலை மற்றும் மேல்நிலை மேலாண்மை கல்வித் திட்டங்களில் 50 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறை, ஓய்வுக்குப் பிறகு குடிமை சமூக வாழ்க்கைக்குத் திரும்பும் ராணுவ வீரர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை வழங்குவதற்காக இந்திய வணிகப் பள்ளி (ஐ.எஸ்.பி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. டிசம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை கொடி தினத்தையொட்டி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுச் […]

You May Like