fbpx

கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வரும் 31ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 1ம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 2ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Rain in 3 districts including Cuddalore and Nagapattinam till 10 am

Vignesh

Next Post

ராகி நல்லது தான்.. ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது!!!

Sun Dec 29 , 2024
these people should avoid eating ragi

You May Like