fbpx

குளிர்விக்க வருகிறது மழை..!! அதுவும் இந்த தேதியில்..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

மார்ச் 15ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் எனவும் குறைந்தபட்ச நிலையாக வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்லது.

Chella

Next Post

மீண்டும் உயிர் பலி வாங்கத் தொடங்கிய கொரோனா..!! திருச்சி இளைஞர் பலி..!! பொதுமக்கள் பீதி..!!

Sun Mar 12 , 2023
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்திருந்தது. இருப்பினும், உருமாறி வரும் ஒமைக்ரான் வகை தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும், மக்கள் எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில், தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் […]

You May Like