fbpx

இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…? முழு விவரம்

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல காஞ்சிரபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது

Vignesh

Next Post

வெள்ள அபாய எச்சரிக்கை!… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

Thu Nov 30 , 2023
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு குளங்கள் ஏரி நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தற்போது காற்றழுத்த […]

You May Like