fbpx

மக்களே‌ எல்லாம் உஷாரா இருங்க…! இன்று 20 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை…!

திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னல்‌ மற்றும்‌ பலத்த காற்றுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, சேலம்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, அரியலூர்‌,பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி,காரைக்கால்‌ ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

பிஎம் கிசான் திட்டம்..!! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.6,000 கிடைக்குமா..? வெளியான புதிய அறிவிப்பு..!!

Wed May 3 , 2023
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. […]

You May Like