fbpx

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல்‌ 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ வரும் 9-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல்‌ 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. ஒருசில இடங்களில்‌ இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. அதிக வெப்பநிலை மற்றும்‌ அதிக ஈரப்பதம்‌ இருக்கும்‌ பொழுது வெப்ப அழுத்தம்‌ காரணமாக அசெளகரியம்‌ ஏற்படலாம்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Vignesh

Next Post

18 வயதிற்கு உட்பட்டவர்கள் லிவிங் டுகெதர் உறவில் இருப்பது ஒழுக்கக்கேடானது!… அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து!

Fri Aug 4 , 2023
18 வயதிற்கு உட்பட்ட ஆண் பெண் இணைந்து வாழ்வது சட்ட விரோதமானது மற்றும் லிவிங் டுகெதர் உறவில் இருப்பது ஒழுக்கக்கேடானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அலி அப்பாஸ் எனும் 17 வயது சிறுவன், 19 வயதுடைய சலோனி யாதவ் என்பருடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். இதனையடுத்து, சிறுமியைக் கடத்திச் சென்றதாக, அந்த சிறுவன் மீது, சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் புகார் தெரிவித்த நிலையில் வழக்குப் செய்யப்பட்டது. இதன்பின், […]

You May Like