fbpx

#Weather: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி…! தமிழகத்தில் அக்டோபர் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோ கணக்கிட முடியாது!… கொல்கத்தா உயர்நீதிமன்றம்!

Fri Sep 29 , 2023
விபத்தில் சிக்கிய இல்லத்தரசிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, ​​ஒரு இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோக் கணக்கிட முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பேருந்துக்காக காத்திருந்த போது, ​​கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயமடைந்ததாகவும், இதனால், தனக்கு 50% அளவிற்கு ஊனம் ஏற்பட்டதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த இந்த […]

You May Like