fbpx

புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… 12 மாவட்டத்தில் பலத்த மழை…! வானிலை மையம் அப்டேட்…!

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஓய்வுப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதிய பலன் வழங்கப்பட வேண்டும்...! கல்வித்துறை இயக்குனர் உத்தரவு..!

Mon Nov 6 , 2023
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணப்பயன்கள் கால தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், அனைத்து ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-ல் தெரிவித்துள்ளவாறு ஒருவர் ஓய்வு பெறும் நாளுக்கு ஆறு மாதத்திற்குள் பொது வைப்பு நிதி முதிர்வு தொகை […]
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

You May Like