fbpx

வருகின்ற 15-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது,

நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌.

Vignesh

Next Post

தீபாவளிக்கு களைகட்டும் புதிய ரக பீர்கள்..!! டாஸ்மாக் கடைகளில் குவியும் மதுப்பிரியர்கள்..!!

Sat Nov 11 , 2023
தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல நூறு கோடிகள் வருமானம் வருகின்றன. தீபாவளியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அடுத்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து ரூ.464 கோடியாக உயர்ந்தது. மேலும், இதனை இலக்காக வைத்து ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் […]

You May Like