fbpx

பெரும் ஏமாற்றம்…! இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை…! சென்னை வானிலை மையம் தகவல்…!

வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நாளை முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை.

Vignesh

Next Post

பரபரப்பு...! பிப்ரவரி 10-ம் தேதி வரை 144 தடை...! சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்த கூடாது...!

Thu Jan 12 , 2023
உத்தரபிரதேச அரசு லக்னோவில் 144 தடையை அமல்படுத்தி உள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், தேசிய நிகழ்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை மனதில் கொண்டு. லக்னோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல அரசு நுழைவுத் தேர்வுகள் போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

You May Like