fbpx

தென்‌தமிழக மாவட்டங்களில்‌ இன்று மழைக்கு வாய்ப்பு…! 22, 23 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை…!

தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வரும்‌ 21ஆம்‌ தேதி ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல்‌ வரும்‌ 22 மற்றும் 23ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு..!! நாளை முதல் விடுமுறை..!! குஷியில் மாணவர்கள்..!!

Thu Apr 20 , 2023
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்தது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் முடிக்க தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது. […]

You May Like