fbpx

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ ஆகிய பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. மேலும்‌, வரும் ஜூன்‌ 6 மற்றும்‌ 7-ம்‌ தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்‌கூடும்‌. அதிகபட்ச வெப்ப நிலையாக 41 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முக்கிய அப்டேட்...! ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ்...!

Sun Jun 4 , 2023
ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 280க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர்‌. மேலும்‌ 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம்‌ அடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. தற்பொழுது விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் […]

You May Like