fbpx

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை…!

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களைப் பொறுத்தவரை எந்த எச்சரிக்கையும் இல்லை, வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி...! ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அதிரடி அறிவிப்பு...!

Fri Oct 6 , 2023
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது, ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அத்துடன் […]

You May Like