fbpx

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை.‌‌..! மக்களே எல்லாம் உஷார் இருங்க…!

தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கர்ப்பத்தை கலைக்க கணவரின் அனுமதி தேவை இல்லை...! நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு...!

Wed Sep 28 , 2022
21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]

You May Like