fbpx

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆந்திர கடலோரப் பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும், தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 11 முதல் 13-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் கர்நாடக கடலோர பகுதிகள்,லட்சத்தீவு, வடக்கு கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 12ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

தவறான வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?

Fri Sep 9 , 2022
ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.. ​​யுபிஐ, நெட் பேங்கிங், மொபைல் வாலட் ஆகியவை மூலம் சில நொடிகளில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.. வங்கி வசதிகளை எளிதாக்க பல புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் இதனுடன் சில சிரமங்கள் வருகின்றன. உதாரணமாக, நீங்கள் தற்செயலாக வேறொருவரின் கணக்கில் பணத்தை மாற்றினால் என்ன செய்வீர்கள்? அந்த பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவீர்கள்? […]

You May Like