fbpx

தமிழகத்தில் மார்ச் 30 வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது, இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

என்.எல்.சி தொடர்பாக இனிவரும் காலங்களில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெறும்….! பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…..!

Sun Mar 26 , 2023
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், நெய்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாகவும் ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சி நிறுவனம் 100 மடங்கு ஆபத்தானது எனவும் கூறினார் […]

You May Like