fbpx

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 14,15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்கதிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், வடக்கு கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

”தவறான பொருளாதாரக் கொள்கையால் 4.6 கோடி இந்தியர்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்”..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Thu Aug 11 , 2022
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற நேரத்தில், இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்த நேரத்தில் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், ஏழை எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அழிவு […]
”தவறான பொருளாதாரக் கொள்கையால் 4.6 கோடி இந்தியர்கள் கடும் பாதிப்பு”..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

You May Like