குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டவ கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அக்.1ஆம் தேதி முதல் இன்று வரை சராசரி அளவான 30 செ.மீ.க்கு பதில் 25 செ.மீ மட்டுமே பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாட்டில் 11 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 16.செ.மீ மழையும், சாத்தான் குளத்தில் 12 செ.மீ மழையும், திருச்செந்தூர் 11 செ.மீ மழையும், கயல்பட்டினம் நெல்லை மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.