fbpx

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

வரும் 26 தேதி ஓரிரு இடங்களிலும், 27 மற்றும் 28, 29 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 முதல் 80.6 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும்.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்வரும் 26-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

English Summary

Rain with thunder and lightning in Tamil Nadu today

Vignesh

Next Post

பி.டெக், எம்.டெக் & பிஹெச்டி ஆய்வு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...!

Wed Sep 25 , 2024
B.Tech, M.Tech & PhD study students can apply for the scholarship

You May Like