fbpx

வரும் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர் மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர் மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 24-ம் தேதி, வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. எனவே வரும் இன்று முதல் 3 நாட்களுக்கு, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

நாடு தழுவிய போதை விழிப்புணர்வு பிரச்சார பயணம்; அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும்.. அன்பில் மகேஷ்..!

Tue Sep 20 , 2022
சென்னை, போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடர்பான போஸ்டரை துவக்கி வைத்த பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் துவங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதில் நாங்களும் கலந்து கொள்வோம். கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறோம். போதைக்கு அடிமையானவர்கள், உடன் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டாக தான் இந்த […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

You May Like