மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது.
இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. ஆகவே அடுத்த 3 தினங்களுக்கு மும்பை மாநகரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மும்பையின் உயிர் நாடி போல திகழ்ந்துவரும் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயில் செயல்படும் உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த மழையின் காரணமாக, ரயில் சேவைகள் சற்று தாமதமாக இயங்கி வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வந்த மழை என் காரணமாக, ஒரு சில பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் எதுவும் இதுவரையில் ஏற்படவில்லை.
சியோன்,மாதுங்கா, குர்லா செம்பூர், அந்தேரி,பரேல் போன்ற நகரங்கள் மும்பையின் அனேக இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கன மழை வரையில் பெய்து வருகிறது இத்தகைய நிலையில் தான் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரையில் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.