fbpx

மனைவியை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்..!! வெளியான பகீர் வீடியோ!!

ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறை நிலத்தில் அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்த கணவன், தனது மனைவியைத் தாக்கி, பைக்கின் பின்னால் கயிற்றால் கட்டி, பாறைப் பரப்பில் பல கிலோ மீட்டர்கள் இழுத்துச் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, வண்டியில் இருந்து கீழே இறங்கிய அந்த நபர் காயமடைந்த பெண்ணின் மீது நிற்கிறார், பெண்ணில் அலரல் சத்தம் காண்போர் நெஞ்சை பதற வைத்தது.

பஞ்சாப்பைச் சேர்ந்த சுமித்ரா (25) என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு வரதட்சணையாக ரூ.2 லட்சம் கொடுத்து திருமணம் செய்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு முன்பே சுமித்ராவின் தந்தை இறந்து விட்டார்.  திருமணத்தைத் தொடர்ந்து, பிரேமரம் சுமித்ராவை நஹர்சிங்புராவுக்கு அழைத்து வந்தார்.பக்கத்து பெண்கள் உட்பட யாருடனும் அந்த பெண் பேச கணவன் அனுமதிக்கவில்லை. 

சம்பவத்தன்று, சுமித்ரா தனது கணவர் மற்றும் மாமியாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதுஅருந்திவிட்டு வந்த பிரேமரன், அப்பெண்ணின் கால்களை இருசக்கர வாகனத்தில் கட்டி கரடு முரடான பாதையில் இழுத்துச் சென்றுள்ளான். இச்சம்பவம் கடந்த மாதம் நடந்த நிலையில், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தற்போது ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரில் தனது மைத்துனருடன் தங்கியுள்ளார். இதுவரை அவர் தனது கணவர் மீது புகார் அளிக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read more ; மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம்..!! நினைத்துக் கூட பார்க்க முடியாத வட்டி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Rajasthan Shocker: Disturbing Video of Man Dragging Wife Behind Bike Goes Viral

Next Post

பள்ளி மாணவர்கள் பாடநூல் விலை 40% உயர்வு... பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம்...!

Tue Aug 13 , 2024
40% increase in the price of textbooks for school students... Pamaka Anbumani Ramadoss condemned

You May Like