fbpx

ரஜினி அரசியல்..!! மனம் திறந்த மனைவி லதா..!! என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!!

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது, நீதிமன்றத்திற்கு சென்றபோது தலையில் முக்காடு போட்டு சென்றது உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்து பேசினார். ‘கோச்சடையான்’ திரைப்பட வழக்கில் லதா ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் மோசடி எதுவும் செய்யவில்லை. நான் செலிப்பிரிட்டியா இருப்பதாக அவர்கள் வன்மத்துடன் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். செலிபிரிட்டியான எங்களுக்கே இப்படித் தொல்லைக் கொடுக்கிறார்கள் என்றால், பொதுமக்கள் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதேபோல, நான் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போனேன் என செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெயில் அடித்ததால் தான் துப்பட்டாவை தலையில் போட்டேன். தவிர, நான் ஓடி ஒளியவில்லை” என்றார்.

ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் அரசியலுக்கு வராதது வருத்தம் தான். ஆனாலும், அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

Chella

Next Post

தமிழக மக்களே..!! மீண்டும் கனமழை அலர்ட்..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Wed Dec 27 , 2023
தமிழ்நாட்டில் டிசம்பர் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை மற்றும் காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, டிசம்பர் 26, 27, 28, 29, 31 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், […]

You May Like