fbpx

‘ரஜினிகாந்த் பயோபிக்’ திரைப்படமாக உருவாகிறது.. ரஜினியாக தனுஷ் நடிக்கிறார்?

பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக் படத்திற்கான உரிமத்தை பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா பெற்றுள்ளார். இந்தத் தகவல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனுஷ் ஆசைப்பட்டபடி ரஜினியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். இதுகுறித்தான அறிவிப்பையும் வெளியிட்டனர். நீண்ட நாள் கழித்து ரஜினி பாலிவுட்டில் படம் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதற்கான இயக்குநர் உரிமத்தைத்தான் சஜித் நதியத்வாலா பெற்றிருக்கிறார். சஜித் நதியத்வாலா நடிகராக மட்டுமல்லாது ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர் என்பது அவரது நெருக்கமான வட்டாரத்தினர் அறிவார்கள். 

இவர் ஏற்கனவே 83, சூப்பர் 30, கிக் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆவார். இதற்கு ரஜினிகாந்த் ஒகே சொல்லிவிட்டதால், பயோபிக் படத்துக் கதை எழுதும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பேப்பர் வொர்க் முடிந்ததும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

முன்னதாக ரஜினிகாந்தின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட பிரிவு காரணமாக அது நடக்காமல் போனது. இப்போது உருவாக இருக்கும் ரஜினிகாந்த் பயோபிக்கில் ரஜினிகாந்தே நடிப்பாரா, அல்லது வேறு நடிகர்கள் வர வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும். ’இளையராஜா’ பயோபிக்கில் நடித்து வரும் தனுஷூக்கு ரஜினியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபடி வாய்ப்பு கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Post

PM Modi | "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையலாம்.." முதலீட்டாளர் சங்கர் சர்மா கணிப்பு.!!

Thu May 2 , 2024
PM Modi: 2024 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையில் பெரிய அளவு வளர்ச்சி இருக்காது என முன்னணி முதலீட்டாளர் சங்கர் சர்மா தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது […]

You May Like