fbpx

வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார்..!! அப்பா அனுபவித்த கஷ்டங்கள்..!! வீட்டிற்கு வந்தும்..!! மகன் சிவராஜ் குமார் பகீர் தகவல்..!!

சந்தன கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்திருந்தார். 108 நாட்களுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்ட நிலையில், ராஜ்குமார் அனுபவித்த துயரங்களை அவரது மகன் சிவராஜ் குமார் பகிர்ந்துள்ளார்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் ராஜ்குமார். இவரது இரு மகன்கள் புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்கள். இவர்களில் புனித் ராஜ்குமார் இறந்துவிட்டார். சிவராஜ் குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் நடித்த கேமியோ ரோல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது; ”அப்பாவை வீரப்பன் கடத்திச் சென்ற போது சிவாஜி, ரஜினி, அர்ஜுன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி என பலரும் மிகுந்த வேதனைப்பட்டனர். அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்பாவை வீரப்பன் கடத்திய சமயத்தில் அவருக்கு முழங்கால் வலி பிரச்சனை அதிகம் இருந்தது. அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது. ஆனால், காட்டுக்குள் அவர் நடந்து கொண்டே இருந்திருக்கிறார்.

சுற்றிலும் காடு, எங்கும் இருட்டு, ஆறுகள் ஓடும் சத்தம், அத்துடன் மிருகங்கள் கத்தக்கூடிய சத்தம், அவ்வப்போது சிறிது சூரிய வெளிச்சம். இப்படித்தான் அவருடைய ஒவ்வொரு நாட்களும் இருந்துள்ளன. அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு வீட்டுக்கு வந்த போதும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கு சிறிது காலம் ஆனது. காட்டில் சுற்றிலும் இருட்டாக இருந்தது. இங்கு வீட்டில் இருந்த மின்விளக்குகளை அவர் பார்த்தபோது அவருக்கு மிகப்பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. இருப்பினும் யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்து அவர் துயரத்தில் இருந்து மீண்டு வந்தார்” என்று சிவராஜ் குமார் கூறியுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் காஜனூர் ஆகும். அங்குள்ள அவரது பண்ணை வீட்டில் ராஜ்குமார் தங்கியிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜ்குமாரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 108 நாட்களுக்குப் பின்னர் அவர் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.

Chella

Next Post

தொடர் கனமழை..!! உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்..!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Mon Jan 8 , 2024
செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், அடையாறு ஆற்றில் கலந்து கடலை அடைவது வழக்கம். இந்நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் […]

You May Like