fbpx

23 புதிய சைனிக் பள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கி உத்தரவு…!

23 புதிய சைனிக் பள்ளிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்ததுள்ளார்.

அரசு சாரா நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து 6-ம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், சைனிக் பள்ளிகள் சங்கம் நாடு முழுவதும் அமைந்துள்ள 19 புதிய சைனிக் பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம் சைனிக் பள்ளி சங்கத்தின் கீழ் கூட்டாண்மை முறையில் செயல்படும் புதிய சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

100 புதிய சைனிக் பள்ளிகளை நிறுவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் பின்னால் உள்ள நோக்கங்கள், தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும், ஆயுதப்படைகளில் சேருவது உட்பட அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும்.

இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட 23 அங்கீகரிக்கப்பட்ட புதிய சைனிக் பள்ளிகளின் மாநில / யூனியன் பிரதேச வாரியான பட்டியலை https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். இந்த புதிய சைனிக் பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும்,

Vignesh

Next Post

”1,000 ரூபாயை முதலீடாக வைத்து லட்சங்களை சம்பாதிக்கலாம்”..!! பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Sep 18 , 2023
குடும்ப பெண்கள் சிலருக்கு நிலையான வருமானம் இல்லை. அதனால்தான் அவர்களால் பெரிய அளவில் முதலீடு செய்ய முடிவதில்லை. ஆனால், மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் லட்சங்களைச் சேர்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல. முதலீட்டில் நீங்கள் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இல்லத்தரசிகளுக்கு சிறந்த விருப்பமாக இருக்கக்கூடிய சில திட்டங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மாதம் 1,000 ரூபாய் முதலீடு […]

You May Like