அயோத்தி ராமஜென்ம பூமியில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலா சிலை கண்களை சிமிட்டி சிரிப்பது போன்ற காணொளி காட்சிகள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ராமர் கோவில் கட்டப்பட்டது .
இந்தக் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பல்வேறு துறையின் பிரபலங்கள் சாமியார்கள் மடாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்நிலையில் பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராம்ரின் சிலை தலையை அசைத்து கண்களை சிமிட்டி புன்னகை செய்வது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ மக்களின் மனதை கவர்ந்துள்ளது.