fbpx

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில், சிறப்பு விளக்குகள், ‘கர்ப்ப கிரகத்தில்’ பயன்படுத்தப்படும் பாரம்பரிய தீபம் | முழு விவரங்கள்.!

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நகரம் முழுவதும் விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் ராமர் கோவில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் அலங்காரங்களுக்காக இயற்கையான மலர்களே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குளிர்காலம் என்பதால் மலர்கள் நீண்ட நேரம் வாடாமல் வாசனை தரும். மேலும் கும்பாபிஷேக தினமான ஜனவரி 22 ஆம் தேதியும் இயற்கையான மலர்களைக் கொண்டே கோவில் அலங்கரிக்கப்பட உள்ளது. கோவில் அலங்காரம் மற்றும் மின் விளக்குகள் அலங்காரத்திற்கென தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கோவிலின் அலங்காரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் மற்றும் அயோத்தி வீதிகள் காண்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் உள்ள அலங்காரங்களில் மின்விளக்குகளை கொண்டு தீபம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறதுபாரம்பரியத்தை நிலை நிறுத்தும் வகையில் இது போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருப்பதாக ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ராம்ளாவின் சிலை வைக்கப்பட்டிருக்கும் கருவறையில் பாரம்பரியமான தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கிறது. தீபங்களின் ஒளியில் குழந்தை ராமரின் சிலை தெய்வீகமாக வீற்றிருக்கிறது.

51 இன்ச் உயரம் கொண்ட ராமர் சிலை மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு கோவிலில் உள்ள கற்பகிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. மாலை நேரத்தில் கண் கவரும் வண்ண விளக்குகளால் ஒளிரும் ராமர் கோவில் காண்பதற்கே அரிய காட்சியாக இருக்கிறது.

Next Post

அயோத்தியில் பரபரப்பு: "உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல்.." பிரிவினைவாத இயக்கம் எச்சரிக்கை.!

Sat Jan 20 , 2024
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அயோத்தி நகரில் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளும் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் பிரதிஷ்டை நிகழ்ச்சி திங்கள் கிழமை […]

You May Like