அயோத்தி ராமர் கோவிலின் வளாகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், அவருடைய சர்வீஸ் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கியின் புல்லட் சீறி பாய்ந்தது. இந்த புல்லட் அங்கு பணியாற்றி வந்த 50 வயது மதிக்கத்தக்க பிளட்டூன் கமாண்டர் ராம் பிரசாத்தின் நெஞ்சில் பாய்ந்தது. இதனால், படுகாயமடைந்த ராம் பிரசாத், உடனேயே அயோத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏகே 47 தோட்டாவால் ஜவான் ஒருவர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பின்னரே துல்லியமான காரணம் தெரியவரும்.
தீவிர சிகிச்சை பெற்றுவரும் ராம் பிரசாத், கடந்த ஆறு மாதங்களாக அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிகிச்சைக் கொடுத்த அயோத்தி மருத்துவக் கல்லூரியின் பொறுப்பாளர் அவருடைய உடல் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Read More : பழைய ரூ.50 நோட்டு உங்கக்கிட்ட இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதிதான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!