fbpx

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: மத்திய அமைச்சர்களும் போகக்கூடாதாம்!… மோடியின் திட்டம் என்ன?

அயோத்திக்கு நேரில் வராமல், அவரவர் மாநிலங்களில் மக்களுடன் இணைந்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காணுமாறு, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ல் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கிறார். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை மக்கள் இயக்கமாக மாற்ற, கும்பாபிஷேக நாளில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அனைத்து பகுதிகளிலும் ராமர் கோவில் அல்லது ஏதாவது ஒரு கோவிலில் பெரிய ‘டிஜிட்டல்’ திரையில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு வழிபாடு, ராம பஜனை, அன்னதானம், பொது வெளியில் தீபம் ஏற்றுதல் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஹிந்து அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மத்திய அமைச்சர்களும், பா.ஜ., தலைவர்களும் அயோத்திக்கு நேரில் வராமல், அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோவிலில், மக்களுடன் இணைந்து, டிஜிட்டல் திரையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண வேண்டும். மேலும், சிறப்பு வழிபாடு, பஜனையில் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைமையும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் மக்களுடன் இணைந்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய இணை அமைச்சர் முருகனும், தமிழகத்தில் ஏதாவது ஒரு கோவிலில் மக்களுடன் அமர்ந்து, கும்பாபிஷேகத்தை காண இருப்பதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

Kokila

Next Post

700 சொகுசு கார்கள்..!! பிரம்மாண்ட அரண்மனை..!! உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம்..!!

Sat Jan 20 , 2024
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அவரது முதலெழுத்துக்களான MBZ என்பதை கொண்டு அன்போடு அழைக்கப்படும் ஒரு நபர். இவர், தனது மாபெரும் குடும்பத்திற்கு தலைமை தாங்கி வருகிறார். இவரது குடும்பத்தில் மொத்தம் 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். எமிராட்டி அரச குடும்பத்திற்கு 9 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர். லண்டன் நகர மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப், […]

You May Like