fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! தமிழ்நாட்டிற்கும் நாளை பொது விடுமுறை கொடுங்க..!! ஓபிஎஸ் கோரிக்கை..!!

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், நாளை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"ராமர் கோவில்" நன்கொடை, வரி விலக்கிற்கு பொருந்துமா.? வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது.?

Sun Jan 21 , 2024
ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் மூலம் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் பராமரிப்பு புணரமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரி சட்டம் 1961, 80G (2) (b) பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியானவை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் புனரமைப்பிற்காக வழங்கப்படும் நன்கொடைகளில் 50 சதவீதம் வரி விலக்கிற்கு தகுதியானவை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் 2000 ரூபாய்க்கு […]

You May Like