fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! LED திரைகள் அகற்றம்..!! இந்துக்களின் உரிமை பறிப்பு..!! நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு..!!

காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்ப செய்ய தடை விதித்த திமுக அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த அவர், ”கோயில்களை திமுக தவறாக பயன்படுத்துகிறது. கோயில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு இந்துவுக்கு உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். இந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டு முறையில் திமுக தலையிடுகிறது” என்றார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும், ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை காண எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண, பக்தர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது போலீசார் எச்சரிக்கையால், எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழ்நாட்டில் அடக்குமுறை தொடர்கிறது.

செங்கல்பட்டு அருகே 200 வீடுகள் கொண்ட கருநிலம் என்ற சிறிய கிராமத்தில் அயோத்தி நிகழ்ச்சியைக் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோயில் பகுதியிலும் எல்.இ.டி. கட்ட அனுமதி தரவில்லை. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலும் போலீசார் எச்சரிக்கையால் எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விரோத தி.மு.க. அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தி.மு.க. அரசு எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’இந்த காரணத்திற்காக சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிப்பதா’..? தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Mon Jan 22 , 2024
ஒரு மாநிலத்தில், பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்பதற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் […]

You May Like