fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறை..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான நாளை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால், நேற்று (சனிக்கிழமை) பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் நாளை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை இயங்காது..!! நோயாளிகளின் கதி..?

Sun Jan 21 , 2024
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. நாளை மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கு ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10,000 பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாளைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like