fbpx

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு தங்க மோதிரம் பரிசு … டெல்லியிலிருந்து திரும்பியவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு ……

ராமநாதபுரத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் எளிமையான தோற்றத்தால் மாணவர்களிடம் அன்போடும் கனிவோடும் பேசி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தியவர். இதனால் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவில் இவருக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கினார்.

இவர் டெல்லியில் இருந்து இன்று ராமநாதபுரத்திற்கு திரும்பினார். கீழாம்பல் என்ற கிராமத்தில் கிராம மக்கள் இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருகக்கு தங்க மோதிரம் அணிவித்து அழகு பார்த்தனர்.மேள தாளங்களுடன் ராமச்சந்திரனை வரவேற்ற மக்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பள்ளிக்கு வரும் போது கூட பள்ளி சீருடையிலேயே வருவார். மாணவர்கள் உடன் நன்றாக பழகுவதாலேயே இவர் விருப்பமான ஆசிரியராக ஆனார். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றபோது கூட சீருடையில் இருந்தார்

Next Post

குடித்துவிட்டு வந்த தம்பியை கண்டித்த அண்ணனை!... கத்தியால் குத்திக் கொன்ற கொடூர சம்பவம்..!

Mon Sep 12 , 2022
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று  12-ஆம் வகுப்பு  படிக்கும் இளைய மகன் […]

You May Like