fbpx

பெரியார் பல்கலைக் கழக முறைகேடு…! முதல்வருக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை…!

சேலம் பெரியார் பல்கலைக் கழக முறைகேடு விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான பிரேம் குமார் பொய்யான புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கப்பட்டார்.

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த ஆண்டு நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டது என ஏராளமான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் விசாரணை வரம்பிற்குள் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் அரசாணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள் துணை வேந்தர், துறைத் தலைவர், துணை வேந்தரின் உதவியாளர், பதிவாளர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் நினைத்தால் இந்த விசாரணையை சீர்குலைக்க முடியும், முறைகேடுகளுக்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் அழிக்க முடியும்.

அவ்வாறு நடந்தால் விசாரணைக்கு ஆணையிடப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே, விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை முடிவடையும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை..!

Wed Jan 11 , 2023
திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி புத்துச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

You May Like