fbpx

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும்…!

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்‌

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழ்நாடு அரசு தான் இதற்குக்காரணம் ஆகும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்..ஃ? 2018-ம் ஆண்டில் அரசாணை 149 பிறப்பிக்கப்பட்ட போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.

அவ்வாறு எதிர்க்கப்பட்ட அரசாணையை அவரது அரசு இப்போது செயல்படுத்துவது நியாயமற்றதாகும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணை தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். எனவே, அரசாணை எண் 149-ஐ செல்லாது என்று அறிவித்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃ

Vignesh

Next Post

30 வயதுக்கு கீழ் உள்ள எழுத்தாளர்களுக்கு யுவா 2.0 திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு...!

Tue Oct 4 , 2022
இந்திய படைப்புக்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம், உயர்கல்வித் துறை, இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 22 வெவ்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இளம் மற்றும் வளரும் 30 வயதுக்கு கீழ் உள்ள எழுத்தாளர்களின் பெரிய அளவிலான பங்கேற்புடன் யுவாவின் முதல் பதிப்பின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு, யுவா 2.0 இப்போது தொடங்கப்படுகிறது. இளம், […]

You May Like