fbpx

ராமரின் இலங்கை – அயோத்தி பயணம்!. கூகுள் மேப்ஸின் வைரல் பதிவு!

Lord Rama: இலங்கையில் இருந்து அயோத்திக்கு திரும்பிய ராமர், 21 நாட்களில் பயணத்தை முடித்திருக்கலாம் என்ற கூகுள் மேப்ஸின் பதிவு வைரலாகி வருகிறது.

புராணக் கதைகளின் படி, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தபோது, ராவணன் சீதையை கடத்தி, சுமார் 11 மாதங்கள் அசோக வனத்திலேயே மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது. இதையடுத்து, ராவணனை வதம்செய்து மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நாள் நினைவாக அன்றிலிருந்து தீபாவளி மிகுந்த ஆராவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், ராமர் இலங்கையில் இருந்து அயோத்திக்கு திரும்பிய கால பயணம் குறித்த கூகுள் மேப்ஸின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இலங்கையில் இருந்து அயோத்திக்கு கால் நடையாகப் பயணிக்க சுமார் 21 நாட்கள் ஆகும் என்றும், குறிப்பாக இது தீபாவளி, தசரா பண்டிகைகளுக்கு இடையே உள்ள காலக்கெடுவை ஒத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், ராமன் அயோத்தியை அடைந்த அந்த நாளைதான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதாவது, தசராவிற்கு சரியாக 21வது நாட்களுக்கு பிறகுதான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இருப்பினும் கூகுள் மேப்ஸ் 21 நாட்கள் என்பதை பயண நேரமாக சரியாகக் காட்டவில்லை. உண்மையில் அது வரைபடத்தில் 542 மணிநேரங்களைக் காட்டுகிறது, இது 22.5 நாட்களுக்கு சற்று அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. இலங்கை – அயோத்தி இடையே சுமார் 3,000 கிமீ தூரம் உள்ளது என்றும், அயோத்தியை அடைய சுமார் 66 நாட்கள் ஆகும் என்றும் கூறப்படும் நிலையில், இந்த பதிவு வைரலாகி பயனர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இருப்பினும் சிலர் இதை விமர்சித்து வருகின்றனர்.

காலப்போக்கில் புவியியல் மாற்றங்கள் பழங்கால வழிகளைக் கண்டறிய மேப்பிங் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது சிக்கலை உண்டாக்குகிறது என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு பயனர், பகவான் ராமர் தனது தெய்வீகத் திறன்களுடன் இந்த பயணம் செய்திருக்க முடியும் என்றும் இருப்பினும் 3,100 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் மனிதர்கள் நடந்தால் கடுமையான உடல்நல குறைவை சந்திக்க நேரிடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட பறக்கும் தேர் மூலம் ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோர் புஷ்பக் விமானத்தில் அயோத்திக்கு பறந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். வைரலான பதிவும், அதைத் தொடர்ந்து சமூக ஊடக விவாதங்களும், ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே கருதப்பட வேண்டும். இது தீபத்திருநாளான தீபாவளியைக் கொண்டாடுவதில் யாருடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் குலைத்துவிடக்கூடாது என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

Readmore: திருப்பதி போறீங்களா?. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பக்தர்கள்!

English Summary

Google Maps ‘Shows’ Lord Rama Could’ve Completed Sri Lanka-Ayodhya Journey In 21 Days. Here’s Why You Might Not Be Able To Do The Same

Kokila

Next Post

கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்? நல்லதை குறிக்குமா அல்லது கேட்டதை குறிக்குமா..!

Thu Oct 17 , 2024
If someone you love dies in your dream, does that dream come true? Let's see about that.

You May Like